NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடி அருகே சட்ட விரோத லாட்டரி விற்றவர் கைது : 113 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 1,500/- பணம் பறிமுதல்.

Views: 22

சிப்காட்  பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி டிக்ககெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – 113 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 1,500/- பணம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று (16.05.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,   எட்டையாபுரம் ரோடு மாப்பிள்ளையூரணி விலக்கு அருகே, தூத்துக்குடி மங்களபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் முருகன் (52) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த எதிரி முருகனை கைது செய்து அவரிடமிருந்த 113 வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 1,500/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: