NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#crime: தூத்துக்குடியில் கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கிய 3 பேர் கைது..!

Views: 31

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் கோவில்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக் (19) என்பவர் நேற்று (27.04.2022) மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பாலிடெக்னிக் கல்லூரி சீருடையில் இருந்த சிலர் மேற்படி கார்த்திக்கை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அவரது நண்பர்களான கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர்களான காளிதாஸ் மகன் கார்த்திக் (எ) அட்ட கார்த்திக் (19) மற்றும் துரைக்குமார் மகன் சின்னமணி (24) ஆகியோருடன் சேர்ந்து கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் பாலிடெக்னிக் கல்லூரி சீருடையில் இருந்த ஒரு மாணவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி வழக்குப்பதிவு செய்து கார்த்திக் (எ) அட்ட கார்த்திக், சின்னமணி மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: