NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடியில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்திய 326பேருக்கு அபராதம்..!

Views: 19

தூத்துக்குடியில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்திய 326 வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து துறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் மாதந்திர சாலைப்பாதுகாப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்திற்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியாக செல்போனில் பேசிகொண்டு வாகனத்தை ஓட்டுபவர்களை சிறப்பு தணிக்கை மேற்கொண்டு தணிக்கை அறிக்கை வழங்குவதற்காக, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

துவக்க விழாவினை கடந்த 25ம் தேதி குருஸ்பெனாந்து சிலை சந்திப்பில் வைத்து மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில் ராஜ், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர், சாருஸ்ரீ ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து 11 இடங்களில் 11 குழுக்கள் இத்தணிக்கையினை மேற்கொண்டனர்.

ஏப்ரல் மாதம் முழுவதும் இத்தணிக்கையினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியப்படி, சிறப்பு தணிக்கை ஏப்ரல் 30ம் தேதிவரை மேற்கொள்ளப்பட்டது. தணிக்கையில் மொத்தம் 326 வாகன ஓட்டுநர்களுக்கு செல்போன் பயன்படுத்தி வாகனத்தை ஓட்டியவர்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுநர் உரிமத்தின் மேல் நடவடிக்கை மற்றும் அபராதம் ரூ.1000 ஆன்லைன் மூலமாக வசூல் செய்யப்படும் என வட்டாரப்போக்குவரத்து அலுவலர் விநாயகம் தெரிவித்துள்ளார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: