NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Views: 39

அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் “அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முகவர் பணிக்கு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்பற்ற, சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர், கிராம சபை தலைவர், மற்றும் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவா். பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் மட்டும் ரூ.5 ஆயிரம் காப்பீட்டு தொகையாக, தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் பின்னர் செலுத்த வேண்டும். தங்களது ஏஜென்சி காலம் முடிக்கப்படும் போது, காப்பீடு தொகை தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் கூறப்பட்ட ஆவணங்களுடன் மே 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: