NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்.

Views: 38

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது
அநியாயமாக உயர்த்திய .எப்சி .FC கட்டணத்தை குறைத்திட கோரியும், தாமத FC க்கு தினமும் 50 ரூபாய் அபராதம் விதிப்பதை கைவிட கோரியும்,15 வருட பழைய ஆட்டோவிற்க்கு F.C கட்டணத்தை 600 இருந்து 6000 ரூபாயாக அதாவது 10 மடங்கு உயர்தியதை வாபஸ் பெற கோரியும்,ஆன்லைன் அபராதம் முறையை கைவிட கோரியும், எதிர்பாராதவிதமாக ஏற்படும் சிறிய தவறுகளுக்கு ஓட்டுனர் உரிமம் பரிப்பு
வாகனம் பரிப்பு, அபதாரம்.சிறை தண்டனை என்று ஒரு தவறுக்கு நான்கு வகையான தண்டனைகளை விதிப்பதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்,மத்திய அரசு கொண்டு வந்ததுள்ள புதிய மோட்டார் வாகனம் சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆட்டோ தொழிலாளிகள் RTO அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.காமராஜ். தலைமை தாங்கினார், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவத்து பேசினார், சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.முருகன், போக்குவரத்து சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலிபூதத்தார், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர்
மரிய ஜான் ரோஸ், நெல்லை மாநகராட்சி 55 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் முத்து சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் , சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் நிறைவுரை ஆற்றினார்.
தொடர்ந்து 8-04-2022 ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சிஐடியூ சார்பில் திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி போக்குவரத்து ஆய்வாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: