NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#batmiton: ஆசிய பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா, சிந்து வெற்றி..!

Views: 28

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த‌ சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற‌ பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர்ஒன்’ வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் 21-15, 17-21, 21-13 என்றசெட் கணக்கில் தென் கொரியாவின் சின் யுஜினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 27-25, 21-9 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் பாய் யு போவை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 17 நிமிடம் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 15-21, 9-21 என்ற நேர்செட்டில் உலக சாம்பியனான அகானே யமாகுச்சியிடம் (ஜப்பான்) தோற்று வெளியேறினார். இதேபோல் இந்திய இளம் வீராங்கனை மாளவிகா பான்சோத் 21-9, 17-21, 24-26 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் யோ ஜியோ மின்னிடம் போராடி தோற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 21-15 என்ற நேர்செட்டில் மலேசியாவின் நிக்டி யோங்கை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் உலகபோட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் 21-12, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லி ஷி பெங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத் 17-21, 13-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் வீழ்ந்தார். 2 முறை உலக சாம்பியனான கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 21-17, 17-21, 7-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் சிகோ அரோவார்டோயோவிடம் தோற்று வெளியேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அஸ்வினி-பட்ஷிகா கவுதம் ஜோடி 19-21, 12-21 என்றநேர்செட்டில் மலேசியாவின் அன்னா சிங் யிக் செயோங்-டெக் மே ஸிங் இணையிடம் தோல்வியைதழுவியது. இந்தியாவின் சிம்ரன் சிங்-ரிதிகாதாகெர் ஜோடியும் 15-21, 11-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் பியர்லி தான்-முரளிதரன் தினாக் ஜோடியிடம் பணிந்தது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: