NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

செல்வவளத்தை கொடுக்கும் தை மாத தேவதாஷ்டமி பலன்கள் !

Views: 36

சூரியன் தனுசு ராசியில் இருந்து  மகரம் ராசியில் பிரவேசிக்கும் மாதம்தான் தை மாதம் எனப்படுகிறது. இந்த தை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் அனைவரையும் காக்கும் கடவுளான பைரவரை வழிபடுவதால் ஏராளமான பலன்களை அடையலாம். பைரவர்  உக்கிர தெய்வமாக இருப்பதால்  தன்னை வழிபடுபவர்களின் அனைத்து துன்பங்களையும் விலக்குகிறார்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் பைரவர் வழிபாடு செய்வதால், பித்ரு தோஷங்கள், அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அதையடுத்து, இன்று மாலை தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெற்றிடுங்கள்.

என்றும் மகிழ்ச்சி

தை மாத தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியை தேவதாஷ்டமி என்று கூறுவர்.

இந்த நன்நாளில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இன்று பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். தொழிலில் வளர்ச்சி காணலாம்.

குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சி நிலவ தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்வது சிறந்ததாகும்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்றே அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருவதாக பைரவாஷ்டகம் தெரிவிக்கிறது.

• அதனால் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.

ராகு காலத்தில்

தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை, காலத்தில் வழிபட்டால்
தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை, ராகு காலத்தில் வழிபட்டால், செல்வத்தின் அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

தோஷங்கள், திருஷ்டிகளை போக்கும் சிகப்பு கலர் துணி கொண்டு திரி செய்து நல்லெண்ணெய் விளக்கு போடவேண்டும்.

பாவக்காயில் திரி போட்டு நல்லெண்ணெய் விளக்கேற்றுவது மிகவும் சிறப்பாகும்.

மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத்துவங்கும்.

பாவ வினைகள் தீரத்துவங்கியதுமே, செல்வச்செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

இதுநாள் வரை வர வேண்டிய பணம் வந்துவிடும்.

• கடன்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

• வேலை செய்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும்.

வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: