NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

மின் கம்பத்தில் பைக் மோதி மூக்குப்பொடி வியாபாரி பரிதாப‌ பலி..!

Views: 35

சாத்தான்குளம் அருகே பைக் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதியதில் மூக்குப்பொடி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமரியாத் தெருவைச் சேர்ந்தவர் ஜெ. ஜெயபாண்டி (73). இவருக்கு மனைவி சுப்புலட்சுமி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் ஜெயபாண்டி மூக்குப்பொடி வியாபாரம் சென்று வந்தார். மூக்குப்பொடி வியாபாரத்துக்காக இன்று காலை திசையன்விளையிலிருந்து நாசரேத்திற்கு அவரது பைக்கில் சென்று விட்டு ஊர் திரும்பினார்.

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வள்ளியம்மாள்புரம் அருகில் வந்தபோது திடீரென பைக் நிலைதடுமாறியதில் அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: