NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் புத்தக விற்பனை துவக்கம்.!

Views: 31

தஞ்சாவூர், தமிழ் பல்கலைகழகத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில், புத்தக விற்பனையை துணைவேந்தர் துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர், தமிழ்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மட்டுமின்றி, உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் எனப் பலவகை நூல்களையும் பதிப்புத்துறை சார்பில், நூல்களாக வெளியிட்டு, அதனை பொதுமக்கள், மாணவர்கள் படித்து பயன் பெறும் வகையில், ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 50 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி விலையில், நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு திங்கள்கிழமை முதல் வரும் மே.17 ஆம் தேதி வரை, 30 நாட்களுக்கு சிறப்பு விலை நூல்கள் விற்பனை, பல்கலைக்கழக வாகை வளாகத்தில் நடைபெறுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் துவக்கி வைத்தார். பதிப்புத்துறை இயக்குநர் இரா. சீனிவாசன், பதிவாளர் (பொ) இரா. நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், 289 தலைப்புகளில் உள்ள நூல்கள் இடம்பெற்றுள்ளன. நூல்கள் குறித்து அறிந்து கொள்ள 94891 02276 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறையின் வழியாக இதுவரை 525 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக 12ஆவது திட்ட நல்கை நிதியிலிருந்து 16 புதிய நூல்கள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு நிதியில் இருந்து நூல்கள் மறுபதிப்பு பணிக்காக ரூ 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 216 நூல்கள் அச்சுப்பணியில் இறுதி கட்டத்தில் உள்ளன. இதை போல 2021– 2022 ஆம் ஆண்டில் 43 மறுபதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு, 13.57 லட்சத்திற்கும், 2022 ஆம் ஆண்டு இதுநாள் வரை சுமார் 2.94 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன” என்றார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: