NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#Breaking: கூட்டுறவு கடன் சங்கத்தில் பத்து ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மோசடி : சிபிஐ விசாரணை நடத்தக் கோரிக்கை!

Views: 27

பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் 0.344 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 10ஆண்டுகள் முறைகேடுகள் நடந்துள்ளது. அரசு ஆவணங்களை சரிபார்த்து முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த சிபிஐ விசாரணைக்கு உத்தர விடவேண்டும். பாதிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிகுழுக்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெயரில் பலகோடி ரூபாய் மோசடியாக பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

பொதுமக்கள் பெயரில் பல கோடி ரூபாய் அரசுக்கு நிதி இழப்பு செய்து ஊழலுக்கு துணை போன கூட்டுறவு கடன் சங்கத்தின் கிளார்க் மற்றும் தலைவா உள்ளிட்ட நிர்வாகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க்ப்பட்டது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: