NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

மாநில அளவிலான MEXPO -2022 கலைப் போட்டியில் காமராஜ் கல்லூரி மாணவர்களுக்கு சாம்பியன்ஷிப்

Views: 15

திருநெல்வேலி புனித சவேரியார் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் மாநில அளவிலான MEXPO -2022 கலைப் போட்டியில் காமராஜ் கல்லூரி மாணவர்கள் மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர்.

இந்த போட்டிகளில் தமிழகமெங்கும் 35 கல்லூரிகளைச் சேர்ந்த 427 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வணிகவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக கலைப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளனர். இவர்களை காமராஜ் கல்லூரி செயலர் திரு சோமு, முதல்வர் நாகராஜன், இயக்குனர் அருணாச்சல ராஜன், வணிகவியல் துறை தலைவர் கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் பால்ராஜ், தங்க ஜேசு, சதீஷ் ஆகியோர் பாராட்டினர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: