NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்த விக்னேஷ் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Views: 28

போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்த விக்னேஷ் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் இருவரும் புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த 19-ந் தேதி இரவு போலீசாரின் வாகன சோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக பிடிபட்டனர்.அவர்களை தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றிருந்த சமயத்தில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த பிரச்சினை இன்று சட்டசபையில் எழுப்பப்பட்டது. இதை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக் கொண்டு கட்சித்தலைவர்களை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, விசாரணையில் சுரேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகளும், விக்னேஷ் மீது 2 கன்னகளவு வழக்கும் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் அடுத்த நாள் போலீஸ் நிலையத்திலேயே காலை உணவு வழங்கப்பட்டது. இதனால் விக்னேசுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் கீழ்ப் பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் சந்தேக சாவு என வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீஸ் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன் ராஜ், ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கு முடிவு எப்படி இருந்தாலும் மரணம் அடைந்த ஏழ்மையான விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்த சுரேசின் உயர் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்று கூறினார்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: