NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#nellai: நெல்லையில் பாரம்பரிய கோழி, ஆடு, நாய் கண்காட்சி : ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்..!

Views: 29

நெல்லையில் பாரம்பரிய கோழி, ஆடு, மற்றும் நாய் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு இன்று திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் இராமையன்பட்டி அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆடு, கோழி மற்றும், நாய்கள் அழிவுப் பாதையில் இருந்து பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய கோழி ஆடு மற்றும் நாய் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மண்டல அளவிலான பாரம்பரியமிக்க நாட்டின் கால்நடைகள் கோழிகள் மற்றும் நாய்கள் கண்காட்சி உலக கால்நடை தினத்தை முன்னிட்டு நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நாட்டு ஆடுகள் கோழிகள் நாய்கள் கின்னிக்கோழிகள் வான்கோழி வாத்து போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னி என வெள்ளாடு கொடியினை வெள்ளாடு கீழ் கரிசல் வேம்பூர் செவ்வாடு இன செம்மறி ஆடுகள் மற்றும் கன்னி சிப்பிபாறை ராஜபாளையம் கோம்பை ஆகிய நாட்டின நாய்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்ட நாட்டு இனங்கள் தற்போது முறையற்ற கலப்பின சேர்க்கையால் எண்ணிக்கையில் குறைந்து வருவதால் நாட்டின வகைகள் அழிவை சந்தித்து வருகிறது இதனை தடுக்கவும் நாட்டினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கால்நடை பண்ணையாளர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கண்காட்சியை காணும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு வகை ஆடு நாய் கோழி இனங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காணும் வகையில் பிரத்யேகமாக கூண்டுகள் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த கண்காட்சியை பார்த்து சென்றனர் அவர்களுக்கு கால்நடை மருத்துவ மாணவர்கள் தரப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால்நடைகள் குறித்து விளக்கமளித்து வருகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பழனிசாமி , தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்புத்திட்டம் பட்டியலின மக்கள் உபதிட்டம் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் தி.வ.மீனாம்பிகை, முனைவர் த.ரவிமுருகன் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், இராமையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கு.டேவிட் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: