NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து செங்கல் தொழிலுக்கு உலர் சாம்பல் வழங்க நீதிமன்றம் பரிந்துரை!

Views: 17

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து செங்கல் தொழிலுக்கு உலர் சாம்பல் தங்குதடையின்றி வழங்க உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் போது சாம்பல் கழிவுகள் மிச்சமாகும். இந்த சாம்பல் கழிவுகளை அப்படியே கடலில் கொட்டுவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தினசரி மின்சார உற்பத்தி செய்யும் போது வெளியாகும் சாம்பலில் 20 சதவீதம் அளவு சாம்பல்களை உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்க 1999-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

இதன்படி சிறு, குறு தொழில் முனைவோர்கள் அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் கழிவுகளை பெற்று உலர் சாம்பல் செங்கல் தயாரித்து வந்தனர். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் சாம்பல்கள் அனுப்பபட்டன. இந்நிலையில், 01.04.2022 முதல் உலர் சாம்பல் வழங்கும் இந்த ஆணை ஒதுக்கீடு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் புதுப்பித்தல் கடிதத்தை பெற்றுக்கொண்டு உலர் சாம்பல் வழங்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் பாதிப்படைந்த உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மதுரையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் விசாரணை 28.04.2022 ஆண்டு மதிப்பிற்குரிய நீதி அரசர் அப்துல் குத்தோஸ் முன்பு வந்தது. இந்த விசாரணையை தொழில் நீதிமன்றம் முடிவு செய்யும்படி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை கடந்த 07.05.2022 அன்று நீதி அரசர் ராஜா முன்னிலையில் விசாரணை எடுக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதி அரசர் தூத்துக்குடிஅனல் மின் நிலைய தலைமை பொறியாளர் அவர்களை உலர் சாம்பல் இல்லாமல் மூடப்பட்டிருக்கும் அனைத்து செங்கல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உலர் சாம்பல் குறைந்தபட்சம் 20% தங்கு தடையின்றி வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார். இந்திய நீதிமன்ற வழிகாட்டுதல் உத்தரவின்படி 11.05.2022 முதல் தற்போது உலர் சாம்பல் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணை 15.06.2022 ஆண்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதியரசர் உத்தரவிட்டுள்ளார் என உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: