NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#CPIM: குடியிருப்புகள் இடிப்பதை தடுத்து நிறுத்த முதல்வர் தலையிட வேண்டும் : சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

Views: 24

கோவிந்தசாமி நகர் குடியிருப்புகள் இடிப்பதை முதலமைச்சர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வலியுறுத்தி உள்ளார். மயிலாப்பூர் தொகுதி, கோவிந்த சாமி நகரில் 259 மாடி வீடுகளை ஏப்.29 ஆம் தேதியிலிருந்து வருவாய்த்துறை யினர் அகற்றி வருகின்றனர். மே 8 அன்று குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையன் என்ப வர் தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மே.9 அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில், கோவிந்தசாமி நகர் பகுதிகளை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் உள்ளிட்டோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். உயிரிழந்த கண்ணை யன் மனைவி சத்தியவாணி முத்துவை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

60 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிந்தசாமி நகரில் மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அரசு அதி காரிகள் மூர்க்கத்தனமாக வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியுள்ளனர். இந்த குடியிருப்பு பகுதி நீர்நிலை புறம்போக்கு என்பதற்கு எந்த ஆதார மும் இல்லை. பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள குடி யிருப்புகளை அகற்ற வேண்டிய தேவையே இல்லை. பொதுப் பணித்துறை அதிகாரி களும், ரியல் எஸ்டேட் முதலாளி களும் இணைந்து கபட நாடகம் நடத்தி மக்களை வெளியேற்ற முயற்சிக்கின்ற னர். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி குடியிருப்புகளை இடிப்பது இந்த அரசுக்கு நல்லதல்ல. இந்த வீடுகள் இடிப்பதை தடுத்து நிறுத்துவதோடு, இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக அதே இடத்தில் புதிய குடியிருப்பை அரசே கட்டித் தர வேண்டும். இதனை செய்யவில்லை எனில், பாதிக்கப்பட்ட மக்களை அருகே ரியல் எஸ்டேட் முத லாளிகள் கட்டி வைத்துள்ள புதிய அப்பார்ட்மெண்ட்டுகளில் குடியேற்று வோம். அதனால் ஏற்படும் விளைவு களை எதிர்கொள்ளத் தயார். பணக்காரர்கள் வசதியாக குடி யிருக்க, ஏழை, எளிய மக்களின் குடி யிருப்புகளை இடித்து நாசமாக்குவதை ஏற்க முடியாது. ரியல் எஸ்டேட் முத லாளிகள் தரும் பிச்சைக்காக அதி காரிகள் மூர்க்கத்தனமாக செயல்படு வது கண்டிக்கத்தக்கது. இந்த குடி யிருப்புகளை பாதுகாக்கக் கோரி கண்ணையா உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்துள்ளார். இது தற் கொலை அல்ல. அதிகாரிகளால் திட்ட மிட்டு நடத்தப்பட்டுள்ள படுகொலை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை அல்லது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். கண்ணையாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவார ணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

அரசின் உத்தரவோடுதான் அகற்றப்படுகிறதா?

ருப்புகள் அகற்றப்படுகிறதா? அதி காரிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்களா? அரசு உத்தரவு இல்லா மல் வீடுகளை இடித்த அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் எதையும் செய்ய லாம் என்றால், ஆட்சி, அமைச்சர் பதவி கள் எதற்கு? அமைச்சரவைக்கு என்ன பொறுப்பிருக்கிறது? மக்கள் தெருவில் நிற்பதை பார்ப்பது அமைச்சர்களுக்கு அழகா? நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு ஏன் மேல்முறையீட்டிற்கு செல்ல வில்லை? மக்களின் கருத்துக்களையே கேட்காமல் நீதிமன்றம் வீடுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. பல கோடிக்கணக் கான ரூபாய் கைமாறி இந்த மோசடி நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதி காரிகள், அரசியல் செல்வாக்கு படைத்த வர்களை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும். சென்னையில் பல இடங்களில் குடிசைகள் அப்புறப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். தொலை தூரத்தில் குடியமர்த்துவதை அனு மதிக்கக்கூடாது. தினந்தோறும் 50 – 60 கி.மீ வந்து செல்லும் தொலைவில் மக்க ளை குடியமர்த்தினால் அவர்களின் வாழ் வாதாரம் என்னாவது? பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு வேலை கொடுத்து விட்டு வேண்டுமானால் தொலை தூரத்தில் குடியமர்த்துங்கள்.

ஏழைகளை நகரத்தை விட்டு வெளி யேற்றிவிட்டு, சிங்காரச் சென்னையை கோடீஸ்வரர்களின் சென்னையாக மாற்றும் சதி இதில் உள்ளடங்கி உள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி தலையிட வேண்டும். நேரடியாக இந்த பகுதியை வந்து பார்வையிட வேண்டும்.தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், கே.வனஜகுமாரி, எஸ்.வெள்ளைச் சாமி, ச.லெனின், ம.சித்ரகலா, பகுதிச் செயலாளர்கள் ஐ.ஆர்.ரவி (மயிலை), முகமதுரஃபி (வேளச்சேரி), மயி லாப்பூர் பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், அன்புரோஸ், விஜயா, கிளைச் செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் உயிரிழந்த கண்ணை யாவின் உடலை, உடற்கூராய்வு செய் வது தொடர்பாக மாவட்ட வருவாய் அதி காரி ஜெயராஜ், வருவாய் கோட்டாட்சி யர் வடிவேல் உள்ளிட் டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பங்கேற்ற சிபிஎம், அதிமுக, பாமக, சிபிஐ தலைவர்கள், கண்ணையா தற்கொலைக்கு காரணமான மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும், இளங்கோ தெரு மக்களுக்கு அதே இடத்தில் பட்டா வழங்குவதோடு, இடிக்கப்பட்ட வீடு களுக்கு அதே இடத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உடற் கூராய்வு செய்ய ஒப்புக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: