NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#crime: தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண் வெட்டிக் கொலை: தந்தை, தம்பி வெறிச் செயல்!

Views: 30

செய்துங்கநல்லூர் அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையும், தம்பியும் உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள தாதன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் சுடலைமுத்து (45). இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதியரின் மகள் மீனா (25). காளியம்மாள் இறந்துவிட்டதால், சுடலைமுத்து முப்புடாதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மீனாவுக்கு கால்வாய் கிராமத்தை சேர்ந்த இசக்கி பாண்டி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மீனா கணவரை பிரிந்து அதே கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் வீட்டை விட்டு சென்று 2வது திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மீண்டும் மீனா குழந்தையுடன் தந்தை சுடலைமுத்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் இரண்டு மாதம் கழித்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்து (26) என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் அங்கேயே வசித்து வந்தாராம்.

இதனால் அவரது குடும்பத்தினர் அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாதன்குளம் கிராமத்தில் நேற்று இரவு கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவிற்காக மீனா அவரது மூன்றாவது கணவர் முத்து என்பவருடன் வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது தந்தை சுடலைமுத்து, முப்புடாதி உள்ளிட்ட உறவினர்கள் சிலர் மீனாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாவின் சடலத்தை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக கொலை வழக்குப்பதிவு செய்து மீனாவின் தந்தை சுடலைமுத்து, அவரது மனைவி முப்புடாதி, தம்பி மாயாண்டி உட்பட 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: