NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தேனி அருகே விசாரணை கைதியை தாக்கிய விவகாரத்தில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர்
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Views: 35

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே விசாரணை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ராஜசேகரை திண்டுக்கல் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து திண்டுக்கல் சரக காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவிட்டுள்ளார் .
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி சூசையப்பர் கிராமத்தில் குடியிருந்து வரும் செல்வம் மகன் ரிசாத்ராஜ்.இவர் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது .செல்போன் ,பணம் பறிப்பு தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் ,ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது .இது தொடர்பாக ரிசாத்ராஜ் குடும்பத்தினர் மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு புகார் தெரிவித்தனர் .இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்த உத்தரவிட்டார் .
இதனிடையே திண்டுக்கல் சரக காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகரை திண்டுக்கல் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் .

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: