NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : டிரைவர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

Views: 15

தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் சுரேஷ் (35). அரசு பஸ் டிரைவர். விளாத்திகுளத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் ஆறுமுகநேரி சென்றபோது பஸ் ஸ்டாப் சுமார் 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி பஸ்ஸில் ஏறி உள்ளார். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்கவே பஸ் டிரைவர் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ் ஓட்டிக்கொண்டே டிரைவர் சுரேஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தன் தாயாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவரது தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கெளரி மனோகரி போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சுரேஷை தேடி வருகிறார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: