NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#Health_Tips: இயற்கை முறையில் முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெற சில எளிய குறிப்புகள்..!

Views: 29
pimples home remedies: பருக்களை போக்க உதவும் சிறந்த வீட்டு பொருள்கள்! -  Samayam Tamil

பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும். பருக்கள் வந்தால் நீக்க, அதனை சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு தெரியுமா...!

வெள்ளரிக்காய் : சருமத்தை மென்மையாக்கக் கூடிய சக்தி வெள்ளிக்காயில் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் A, E மற்றும் C நிறைந்துள்ளன. இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும். வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!

பூண்டு : தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது. பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.

Doctor Vikatan - 16 February 2018 - தேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள் |  significance and health benefits of honey - Doctor Vikatan - Vikatan

தேன் : தேன் பருக்களுக்கு சிறந்த ஆண்டி மைக்ரோபியலாக இருக்கும். பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் எத்தனை நன்மைகள்  கிடைக்கும் தெரியுமா?.!! - Seithipunal

எலுமிச்சை சாறு : முகப்பருக்கள் வரக் காரணமான கிருமிகளை எலுமிச்சை முற்றிலும் அழித்துவிடும். எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட புதினா...!

புதினா : இதில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் பருக்களை நீக்க உதவும். மூடியுள்ள சருமத் துளைகளை நீக்கும். இறந்த செல்களையும் நீக்கும். புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பதால் இவ்வளவு பக்க விளைவுகளா? மக்களே உஷார்! | 5  side effects apple cider vinegar people should be aware – News18 Tamil

ஆப்பில் சிடர் வினிகர் : இதில் இருக்கும் சரும நன்மைகள் மிக அதிகம். இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்? பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!-  Dinamani

க்ரீன் டீ : கிரீன் டீ பேகை தண்ணீரில் நனைத்து அல்லது ஃபிரிஜ் ஃப்ரீசரில் பேகை வைத்து பருக்கள் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் நீங்கும்.

How to series: டீ ட்ரீ ஆயில் - முகம், கேசத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது? |  How to use tea tree oil? | How to use tea tree oil? - medicinal benefits of tea  tree oil

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் : முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கும் ஆண்டி பாக்டீரியலாக செயல்படும். எண்ணெயில் பஞ்சை நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தி எடுத்து 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் பவுடர் - பேக்கிங் சோடா ரெண்டையும் எப்படி கண்டுபிடிக்கிறது... | Baking  Soda vs. Baking Powder: Here's the Difference - Tamil BoldSky

பேக்கிங் சோடா : பேக்கிங் சோடாவை பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ பருக்கள் நீங்கும்.

டூத் பேஸ்ட் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க... | check your  toothpaste for these 7 sinful ingredients to avoid - Tamil BoldSky
டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் : முகப்பரு உள்ள இடத்தில் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும். பருக்களும் நீங்கும். பேஸ்டில் ஹைட்ரஜன் பராக்ஸைட் இருப்பதால், சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இதைத் தவிர்க்கலாம். பேஸ்ட் அப்ளை செய்யும் முன் ஐஸ் கட்டிகளை பருக்களில் வைத்து தேய்த்த பிறகு அப்ளை செய்யுங்கள்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: