NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 142பேர் மீது நடவடிக்கை : ஓட்டுநர் உரிமம் ரத்து..!

Views: 26

தூத்துக்குடியில் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிய 142பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 142பேருக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: