NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு : ஆட்சியர் தகவல்

Views: 60

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு பணியிடங்களை நிரப்புவதற்கு 25.4.2022 முதல் 2.5.2022 வரை தூத்துக்குடி புது கிராமம் கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 25.4.2022 முதல் 27.4.2022 வரை ஆகிய மூன்று தினங்கள் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெற்று உள்ளது.

தற்போது கால்நடை பராமரிப்பு துறை மூலம் 28.4.2022 முதல் 2.5.2022 வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் எவரும் 28.4.2022 முதல் 2.5.2022 வரை நடைபெற இருந்த நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: