NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு மிகப்பெரிய கப்பல் வருகை!

Views: 13

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு முதன் முறையாக 299.95 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய கப்பல் வந்தடைந்தது.

மேற்கத்திய நாடான ரியூனியன் துறைமுகத்திலிருந்து 6677 சரக்கு பெட்டகங்களை ஏற்றிக்கொண்டு வந்த இந்த கப்பல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. நாட்டில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் சாகர்மாலா திட்டத்தில் துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து 802 திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக முனையம் ஆக மாற்றும் வகையில் துறைமுகத்தில் பனாமா கப்பல் என்ற சொல்லக்கூடிய பெரிய அளவிலான கப்பல்களை கையாளும் வகையில் நுழைவாயிலை அகலப்படுத்தும் பணி கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் நுழைவாயிலை 300 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மேற்கத்திய நடன ரியூனியன் துறைமுகத்திலிருந்து 6627 சரக்கு பெட்டகங்களை ஏற்றிக்கொண்டு வந்த எம்.எஸ.சி பெட்ரா என்ற கப்பல் இன்று தூத்துக்குடி வந்தது 5200 டன் எடை கொண்ட இந்த கப்பல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் எட்டாவது சரக்குப் பெட்டகத்தில் இந்த கப்பலானது வந்தடைந்தது. இதுபோன்ற பெரிய கப்பல்கள் இதுவரை இலங்கை துறைமுகத்தில் கையாளப்பட்டு அங்கிருந்து இந்தியாவிற்கு தேவையான சரக்கு பெட்டகங்கள் பீடர் வெசல் எனப்படும் சிறிய கப்பல்கள் மூலமாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

சாகர்மாலா திட்டத்தின் பயனாக தற்போது முதன்முறையாக இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கவேண்டிய 2,937 சரக்கு பெட்டகங்களை இறக்குமதி செய்த பின் மீண்டும் கப்பல் தூத்துக்குடியிலிருந்து இசரக்குகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் செல்லும்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: