NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளரை கொல்ல முயற்சி? – நீதிபதிக்கு கடிதம்!

Views: 33

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவல்துறையினர் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், தன்னை தவிர்த்து மற்ற எட்டு பேருமே கொலையை செய்ததாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சாத்தான்குளம் வழக்கில் என்னைத் தவிர்த்து எட்டு காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருக்கிறோம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் கொடூரமான முறையில் அடித்து பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்ததால் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் இறந்து விட்டார்கள் அது சம்பந்தமாக நான் மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் ஏ-2 முதல் A-9 வரையிலானவர்களிடம் ஏன் சாகும் அளவிற்கு அடித்துக் கொலை செய்து விட்டு என்னையும் வழக்கில் மாட்டி விட்டீர்கள் என்று கேட்டதில் தகராறு ஏற்பட்டு அது முதல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2-7-2020 ஆம் தேதி முதல் நான் மட்டும் தனியாகவும் மற்றவர்கள் எட்டுப்பேர் ஒரு பிரிவாகவும் சிறையில் இருந்து வருகிறோம்
எட்டு காவலர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை மிரட்டியதோடு தாக்க முற்பட்டார்கள், நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வரும்போது மீண்டும் சிறைக்கு செல்லும் போதும் அவர்கள் அனைவரும் இடையூறு செய்து கொண்டே வருகிறார்கள் அவர்களின் இடையூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நான் இருந்தால் உண்மையை நீதிமன்றத்தில் சொல்லிவிடுவேன் என்று கருதி என்னை அடித்து கொலை செய்ய பல வகையில் திட்டம் தீட்டி வருகிறார்கள் எனக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் 2022- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி எழுதப்பட்ட கடிதம் மார்ச் 30ஆம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் மூலம் நீதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே நீதிபதியிடம் கொடுக்கப்பட்டதாகவும் இந்தக் கடிதம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என நீதிபதி கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: