NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

அரசு அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Views: 27

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் கணக்கில் வராத சொத்துகளைக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் ஊழல்களை வெளிக்கொண்டுவரும் சோதனையில் போதிய காவல்துறையினரை காவல்துறைத் தலைவர் ஒதுக்க வேண்டும் என்றும் சொத்து விவரங்கள் அதிகாரிகளின் பணி பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: