NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

மதுரை சித்திரைப் பொருட்காட்சி 2022 – செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்..!

Views: 16

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2022 செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, முனைவர்.பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் ஆகியோர் சனிக்கிழமை அன்று துவக்கிவைத்து பார்வையிட்டார்கள் .

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்ததாவது திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது . கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசுப் பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் , நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு தமுக்கம் அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 212 – வது அரசுப் பொருட்காட்சியாகும் . மைதானத்தில் இப்பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை , வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை , பள்ளிக்கல்வித்துறை . இந்து சமய அறநிலையத்துறை , காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும் , மதுரை மாநகராட்சி , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் , ஆவின் , உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மேலும் , தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பறைசாற்றும் வகையில் ” விடுதலைப் போரில் தமிழகம் ” என்ற தலைப்பிலும் , உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பாக குறளோவிய கண்காட்சி அரங்கு உள்ளிட்ட சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன . அதேபோல , சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பங்கேற்று மகிழ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன . மேலும் , பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் , பல்பொருள் விற்பனை அரங்குகளும் , தரத்துடன் கூடிய சுகாதாரமான சிற்றுண்டி விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன . தினந்தோறும் மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன .

அந்தவகையில் , தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும் , குடும்பத்துடன் கண்டுகளித்திட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடனும் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன . இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் இந்த அரசுப் பொருட்காட்சி தினந்தோறும் மாலை மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும் . அரசுப் பொருட்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்க்கு ரூ.15 / -ம் , சிறியவர்க்கு ரூ. 10 / -ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த கண்காட்சி அரங்குகளை கண்டுகளித்திடுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை இயக்குநர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: