NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#minister_anbil_magesh_poiyaamozhi: மாணவர்களின் தவறான செயல்களை தடுப்பதற்கு வழிகாட்டி நெறிமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Views: 26

மாணவர்களுடைய தவறான செயல்களை தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு விரைவில் வெளியிடும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தற்போது கோடை வெயிலின் தாக்கம்,கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையை கருத்தில் விடுமுறைகள் குறித்து முதலமைச்சர் அலுவலகம் உரிய அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடும்.

கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளதால் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி அவர்களை ஒருநிலைப்படுத்தும் நோக்கத்தில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சில இடங்களில் மாணவர்கள் செய்யும் சில தவறான நடவடிக்கைகளுக்கு பெற்றோரின் பங்களிப்பும் காரணமாகிறது. எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க அந்தந்த பள்ளி மேலாண்மை குழு முடிவு எடுக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளது.

மாணவர்களுடைய தவறான போக்குகளை தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அரசு வெளியிடும். இதே போன்ற ஆசிரியர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் கனவு ஆசிரியர் என்ற இதழ் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 23லட்சம் பேர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளியிலும் மேலாண்மை குழுக்கள் இந்த மாதம் இறுதிக்குள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 47 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 53 லட்சம் ஆக உயர்ந்துள்ள நிலையில் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் ஆசிரியர்களை ஆலோசனைபடி அந்தந்த பள்ளிக்கு என்னென்ன தேவைகானதை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக மத்திய அரசின் ஆர்.பி.எஸ்.கே. (RASHTRIYA BAL SWASTHYA KARYAKRAM) திட்டத்தின் மூலமாக 413 வட்டாரங்களிலும் உள்ள தலா 2 மருத்துவர்கள் மூலமாக மன நல ஆலோசனை வழங்கப்படும் என்று கூறினார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: