NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#modi: நாட்டில் அதிகரிக்கும் வெறுப்பு அரசியல் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும்: முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் 108 பேர் கடிதம்..!

Views: 37

“நாட்டில் அண்மைக் காலமாக வகுப்புவாத வன்முறைகளும், வெறுப்பு அரசியலும் வேகமெடுத்துள்ள நிலை யில், இந்தப் பிரச்சனைகளில் பிரதமர் நரேந்திர மோடி தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும்” என்று முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக 108 பேர் கையெழுத் திட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடி தம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: `முன்னாள் அரசு அதிகாரிகளாக இதுபோன்ற அதீத விமர்சனங்களை நாங்கள் வழக்கமாக முன்வைப்ப தில்லை. ஆனால் நம் முன்னோர்கள் உரு வாக்கித் தந்த அரசியலமைப்பின் மாண்பு அழிக்கப்படும் வேகத்தின் கார ணமாக நாங்கள் தானாகவே முன் வந்து பேசுவதற்கும், எங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்கும் தள்ளப் பட்டுள்ளோம்’ கடந்த சில ஆண்டுகளாக அசாம், தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் சிறு பான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ் லிம்கள் மீதான வெறுப்பு வன்முறை கள் அதிகரித்துள்ளன. பாஜக ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், தில்லியிலும் (தில்லி யில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டி லேயே காவல்துறை உள்ளது) இப்பிரச் சனைகள் புதிய பரிமாணத்தை பெற்றுள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பும், தீங்கு செய்யும் மனப்பான்மையும் மாநிலங்களில் உள்ள கட்டமைப்புகள், நிறுவனங்கள், நிர்வாக செயல் முறைகளில் ஆழமாக பதிந்துள்ளது வருத்தமளிக்கிறது. பாஜக ஆட்சி என்பது சட்ட நிர்வாகம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான கருவியாக இருப்பதற்குப் பதிலாக சிறுபான்மையினரை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்கும் வழிமுறையாக மாறி யுள்ளது. இது கவலையளிக்கிறது. சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் ஏழைகளை வெறுப்பின் இலக்கு களாக மாற்றி அவர்களின் அடிப்படை உரிமைகளை தெரிந்தே பறிக்கும் ஒரு நாடாக நாம் மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது அச்சம் ஏற்படுத்தும் வகை யில் அதிகரித்துள்ளன.

நம் நாட்டில் வெறுப்பு காரணமாக நிகழும் அழிவை நாம் கண்டு கொண்டி ருக்கிறோம். இங்கு பலிபீடத்தில் இருப் பது முஸ்லிம்களும், பிற சிறுபான்மைச் சமூகங்களும் மட்டுமல்ல; அரசியல மைப்புச் சட்டமும் தான்’ இதனாலேயே நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப் படுத்தும் உருவமாக புல்டோசர் அரசி யல் முறை மாறியிருப்பது ஆச்சரிய மளிக்கவில்லை. சரியான செயல்முறை, சட்டத்தின் ஆட்சி எனும் கருத்துக்கள் தகர்க்கப்பட்ட தால் தான் தில்லி ஜஹாங்கீர்புரியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும் கட்ட டங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சமூக ரீதியாக எழுந்துள்ள இந்த மிகப் பெரிய பிரச்சனையில், உங்கள் மவுனம் எங்கள் செவித் திறனைச் செய லிழக்கச் செய்கிறது. உங்கள் வாக்குறு தியானஅனைவருக்குமான வளர்ச்சி, அனைவருடனும்’ (சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்) என்ற கொள் ையில் இருந்து உங்கள் மனசாட்சி நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.

சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், உங்கள் கட்சியின் கட்டுப் பாட்டில் உள்ள மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் வெறுப்பு அரசிய லைத் தடுக்க நீங்கள் குரல் கொடுப் பீர்கள் என நம்புகிறோம்’ இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தேசிய முன்னாள் பாதுகாப்பு ஆலோ சகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளி யுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், உள்துறை முன்னாள் செயலாளர் ஜி.கே. பிள்ளை, தில்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் பிரத மர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டிகேஏ நாயர் உள்ளிட்டோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: