NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

கர்நாடகாவில் எஸ்.ஐ தேர்வு முறைகேடு: 30க்கும் மேற்பட்டோர் கைது – வங்கி கணக்குகள் முடக்கம்

Views: 27

கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ., தேர்வு முறைகேடு தொடர்பாக முக்கிய குற்றவாளியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ., தேர்வு முறைகேடு தொடர்பாக, 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் கைதான ஆர்.டி.பாட்டீல், (வயது 45) என்பவர். கலபுரகியின் ஞானஜோதி ஆங்கில பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்து முறைகேடு செய்துள்ளார். இவர், நான்கு பேரிடம் பணம் பெற்று கொண்டு தேர்வு எழுத வைத்துள்ளார்.

அதேபோல ராய்ச்சூரின் லிங்கசகூர் டி.எஸ்.பி., மல்லிகார்ஜுன் வாலி(40) என்பவர், தேர்வு முறைகேடு குறித்து தெரிந்ததும், அதில் தொடர்புடையவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரிடமும் இரவு பகலாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்.டி. பாட்டீலின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: