NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

நெல்லையில் 3 பேர் வெட்டிக்கொலை: 2 பெண்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை..!

Views: 37

நெல்லையில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜ்(வயது 73). கட்டிட காண்டிராக்டர். இவரது சித்தப்பா மகன் அழகர்சாமி(50). இவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு இடத்தை 2 பேரும் சொந்தம் கொண்டாடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை அழகர்சாமி தரப்பினர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஜேசுராஜ் தரப்பினருக்கும், அழகர்சாமி தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அரிவாள் மற்றும் மண் வெட்டியால் வெட்டி உள்ளனர். இதில் ஜேசுராஜ், அவரது சகோதரரான மதபோதகர் மரியராஜ்(56), அவர்களுடைய சகோதரி வசந்தா(40) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வசந்த பாளை தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றி வந்தார்.படுகாயம் அடைந்த வசந்தாவின் கணவர் மற்றொரு ஜேசுராஜ், மரியராஜ் மகன் ஆமோஸ்(23) ஆகியோருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் எஸ் பி (பொறுப்பு) கிருஷ்ணராஜ் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நாஞ்சான்குளத்தை சேர்ந்த அழகர்சாமி, அவரது மனைவி பேச்சியம்மாள், உறவினர்கள் செந்தூர்குமார்(23), மணிகண்டன்(27), மருதன்வாலு பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி(25), மேல கருங்குளம் பகுதியை சேர்ந்த கதிரேசன்(37), ஆனந்தராஜ்(35) ஆகிய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஜேசுராஜின் குடும்பத்தினர் தேவாலயத்திற்கு சென்றுவிட்டனர். அப்போது அழகர்சாமியின் குடும்பத்தினர் அந்த இடத்திற்கு சென்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த ஜேசுராஜ் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.அந்த தகராறை அழகர்சாமியின் உறவினரான ராஜலெட்சுமி வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை அழகர்சாமியின் மகன்களான சுந்தரபாண்டி, ராஜ மணிகண்டன், அவர்களது உறவினர் செந்தூர்குமார் ஆகியோருக்கு செல்போனில் அனுப்பி வைத்துள்ளார்.அவர்கள் 3 பேரும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு வயலுக்கு விரைந்து வந்தபோது ஏற்பட்ட தகராறில் 3 பேர் கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சுந்தரபாண்டி, ராஜ மணிகண்டன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: