NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#Crime: விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

Views: 32

விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் -காடல்குடி சாலை அரசு மதுபான கடை அருகே காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காட்டுப்பகுதியில் இறந்து கிடந்தவர் புதூர் ஆனந்த குருக்கள் தெரு பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் மகன் குமார் (40) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: