NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் : போலீசார் விசாரணை.

Views: 36

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை ஆற்றில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைப் பகுதியில் உள்ள ஆண்டிபட்டி – சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட வளாகத்திற்கு பின்புறம் உள்ள வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக வைகை அணை போலீசாருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் இறந்து கிடந்த நபருக்கு 45 வயது இருக்கலாம் என்றும், இறந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: