NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

விருதுநகர் அருகே 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் : போலீஸ் விசாரணை

Views: 40

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரில் 6 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடமாடும் பகுதியில் சாலையோரம் டிராக்டர் சென்ற போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கோட்டையூர் மேற்கு காலனி பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி, அழகர்சாமி,முருகன், முத்தையா ஆகிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் 15 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களால் அப்பகுதியில் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: