NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

விவசாயம் செழிக்க வேண்டி பொன் ஏர் திருவிழா : சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் வேண்டுதல்!

Views: 24

விவசாயம் செழிக்க வேண்டி விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது.
இந்த‌ ஆண்டு முழுவதும் விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக சித்திரை மாதம் பிறந்ததும் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி பொன் ஏர் திருவிழா நடத்துவது கிராமப்புறங்களில் ஐதீகம். அதன்படி, விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது. 
சிங்கிலிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லக்குமார், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், ஊர் தலைவர்கள் சேதுராஜ், துரைராஜ், நாட்டாமை முத்துக்கண்ணன், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், வேளாண்மை இணை இயக்குனர் நாச்சியார், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில்  விவசாயிகள் தங்கள் வீட்டு வாசலில் குத்துவிளக்கு ஏற்றி நிறைகுடம் தண்ணீர் வைத்து நவதானியங்களை குவித்து வைத்து விவசாய கருவிகளுக்கும் காளை மாடுகளுக்கும் சந்தனம் குங்குமம் மாலையிட்டு பூஜை செய்து வழிபட்டனர். 

அதன் பின்னர் சூரிய வழிபாடு செய்து அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் கிழக்குத் திசையில் உள்ள பொது நிலத்தில் உழவு பணிகள் செய்து நவதானியங்களை விதைப்பு செய்தனர்.   நிறைவாக விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பி வரும்போது, கிராம எல்கையில் விவசாயிகளை பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: