NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, போக்ஸோ வழக்குகளில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

Views: 29

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் போக்ஸோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 28.02.2022 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் யாசர் அராபத் (25) மற்றும் தாளமுத்துநகர், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் அனிபா மரைக்காயர் (23) ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கடந்த 19.02.2022 அன்று 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தருவைகுளம், V.கழுகாசலபுரத்தை சேர்ந்த மரிய மைக்கல் மகன் மணி (56) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேற்கண்ட வழக்குகளில் கைதான யாசர் அராபத், அனிபா மரைக்காயர் மற்றும் மணி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் செந்தில்ராஜ் உததரவின் பேரில் போலீசார் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: