NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தொடர் கோடை மழையால் உளுந்து பயிர் சேதம் – வேதனையில் விவசாயிகள், நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை..!

Views: 29

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மற்றும் அறுவடை செய்யப்பட்டு வயலில் காய்ச்சலுக்கு குவிக்கப்பட்டிருந்த உளுந்து,பயிர்கள் நனைந்து அழுகி நாசமாகியிருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் உளுந்து பயிர் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் தரங்கம்பாடி வட்டத்தில் திருக்கடையூர், கிள்ளியூர் ஊராட்சி, நட்சத்திரமாலை,இரவணியன்கோட்டம், கொத்தங்குடி ஊராட்சி , பனங்குடி, காருகுடி,செருகுடி, விளாகம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் உளுந்து, பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி நடைபெற்று வந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் பெய்த கோடை மழையினால் அறுவடை செய்த உளுந்து பயிர்களை விவசாயிகள் வயலிலேயே குவித்து காய்ச்சலுக்காக மூடி வைத்திருந்தனர்.திடீரென பெய்த தொடர் மழையால் அழுகியும், முளைக்கவும் தொடங்கியுள்ளது. கடந்த சம்பா அறுவடையின்போது மழையால் அறுவடை பாதிக்கப்பட்டதாலும்,தற்போது உளுந்து பயிர் அறுவடையிலும் மழையில் நனைந்து அழுகியதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் என்.சந்திரமோகன் கூறும் போது…உடனடியாக தமிழக அரசு வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: