NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

வஉசி கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடத்த இந்திய மாணவர் சங்க மாநாட்டில் தீர்மானம்

Views: 38

இந்திய மாணவர் சங்கத்தின் வஉசி கல்லூரி கிளை மாநாடு தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.

மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் கார்த்தி தலைமை வகித்தார்.  இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் கிஷோர் குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மூட்டா அமைப்பின் மாவட்ட செயலாளர் பேராசிரியர். சிவஞானம் , மற்றும் பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்திய மாணவர் சங்கத்தின் வஉசி கல்லூரி கிளை மாநாட்டில் மாணவ, மாணவிகளின் ஜனநாயக உரிமைகளை கல்லூரி வளாகத்திற்குள்  பேணிக்காக்க வேண்டும்,
வ உ சி கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படாத மாணவர் பேரவை  தேர்தலை
ஜனநாயக முறையில் அடுத்த கல்வி ஆண்டில்  நடத்த வேண்டும், மாணவ மாணவிகளிடம் ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்படும்  கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வ. உ.சி கல்லூரியில் மாணவர்களுக்கு கோடை காலத்தில் குடிதண்ணீர் வசதியை கூடுதலாக அமைக்க வேண்டும், பழுதடைந்த மின்விசிறிகளை மாற்றிதர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வ உ சி கல்லூரி கிளை மாநாட்டில் கிளை கமிட்டி தலைவராக அருண் சோலை செயலாளராக வேல் சூர்யா இணைச் செயலாளராக கிஷோர் குமார் உட்பட 25 பேர் கொண்ட புதிய கிளை உருவாக்கப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: