NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!

கோப்புக்காட்சி
Views: 29

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு சட்ட விரோதமாக செம்மரக் கட்டைகள் கடத்த முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையத்தில் பெங்களூருவை சேர்ந்த மத்திய புலனாய்வுத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 கோடி எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: