NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

நெல்லை லோடு ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கைது..!

Views: 31

நெல்லையில் லோடு ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அவரது மகன் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரம் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மகன் சசிகுமாா் (42). லோடு ஆட்டோ டிரைவர். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் சந்தையில் மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். தச்சநல்லூா் போலீசார் வழக்குப்பதிந்தனா். மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவின்பேரில், மாநகர காவல் துணை ஆணையா்கள் டி.பி.சுரேஷ்குமாா்(கிழக்கு), கே.சுரேஷ்குமாா்(மேற்கு) ஆகியோா் மேற்பாா்வையில் 2 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அழகுபாண்டியன் (57) , அவரது மகன் பாலமுருகன் (29) , மனைவி ராஜம்மாள் (52), திம்மராஜபுரம் சிதம்பர குமாா் (39), அவரது மனைவி அனிதா (36), தாழையூத்து சங்கா் (எ) சங்கரநாராயணன் (24) ஆகிய 6 பேரை போலீசார் நேற்றுகைது செய்தனா். காவல் உதவி ஆய்வாளா், சசிக்குமாா் இருவரின் குடும்பங்களுக்கு இடையிலான முன்விரோதத்தால் கொலை நிகழ்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

Six people, including a police sub-inspector, have been arrested for  killing a driver at Nellai Market || நெல்லை மார்க்கெட்டில் டிரைவர்  வெட்டிக்கொலை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 ...

இதனிடையே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும், சசிக்குமாரின் குடும்பத்துக்கு நிவாரணம், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி – சங்கரன்கோவில் பிரதான சாலையில் சசிகுமாரின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் உதவி ஆட்சியா் சந்திரசேகா், ஏடிஎஸ்பி மாரிராஜன், தாழையூத்து டிஎஸ்பி ஜெபராஜ், மானூா் காவல் ஆய்வாளா் ராமா், வட்டாட்சியா் சுப்பு ஆகியோா் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: