NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

கொலை வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் தேனி நீதிமன்றத்தில் சரண்..!

Views: 16

தேனி அருகே பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ராணுவ வீரர் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார் .

தேனி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கண்ணன் (வயது 38), இவர் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி மூதாட்டி முத்தம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினார். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான தனிப்படையினர் கண்ணனை தேடினர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்னிலையில் சரண் அடைந்தார். மே 25 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் படை தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: