NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#Srilanka_economy_crisis: இலங்கை பொருளாதார நிதி நெருக்கடி குறித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று விளக்கம்

Views: 28

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் தன்னெலுச்சியான போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவருக்கு பதிலாக புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று, நான்கு அமைச்சர்களை அவர் நியமித்தார்.

அதன்படி பொது நிர்வாக அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜி.எல்.பெரீஸ், நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜயசேகர ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி சார்பற்ற அரசு ஒன்றை அமைக்க வருமாறு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். எனவே இதன் காரணமாக அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி குறித்து இன்று முழு விளக்கம் அளிக்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை நிறைய இருப்பதாகவும், அவைகளுக்கு தமது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் தமது டுவிட்டர் பதிவில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருள் தேவைகளுக்கான நிதியை பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: