NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

கோவில்பட்டியில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி : சதீஷ்கர் ஹாக்கி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த‌ தமிழ்நாடு ஹாக்கி அணி..!

Views: 28

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 12வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி இன்று காலை தொடங்கியது.

வரும் 29ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் போட்டியில் 30 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 540 வீரர்கள் பங்கேற்கும் 50 போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் போட்டியில், குருப் இ பிரிவில் உள்ள பீகார் அணியும், அசாம் அணியும் மோதின. முடிவில் 11 – 1 என்ற கோல் கணக்கில் பீகார் அணி வெற்றி பெற்றது.

2வது போட்டியில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள அருணாச்சல பிரதேசம் – ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. இறுதியில் 5 – 0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றது.

3வது போட்டியில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் – கோவா அணிகள் மோதின. இறுதியில் 10 – 0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்றது.

4வது ஆட்டத்தில் குரூப் ஜி யில் இடம்பெற்ற தமிழ்நாடு ஹாக்கி அணியும் , சதீஷ்கர் மாநில ஹாக்கி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3 – 1 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தமிழக அணியின் கேப்டன் சதிஷ் சிறந்த ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: