NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி : கேரளா ஹாக்கி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஹரியானா ஹாக்கி அணி..!

Views: 20

தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி : 5வது  ஆட்டத்தில் கேரளா ஹாக்கி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஹரியானா ஹாக்கி அணி..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 12வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி இன்று காலை தொடங்கியது.

வரும் 29ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் போட்டியில் 30 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 540 வீரர்கள் பங்கேற்கும் 50 போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் போட்டியில், குருப் இ பிரிவில் உள்ள பீகார் அணியும், அசாம் அணியும் மோதின. முடிவில் 11 – 1 என்ற கோல் கணக்கில் பீகார் அணி வெற்றி பெற்றது.

2வது போட்டியில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள அருணாச்சல பிரதேசம் – ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. இறுதியில் 5 – 0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றது.

3வது போட்டியில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் – கோவா அணிகள் மோதின. இறுதியில் 10 – 0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்றது.

4வது ஆட்டத்தில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு – சதீஷ்கர் அணிகள் மோதின.  பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3 – 1 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.

5வது ஆட்டத்தில் ஹரியானா மாநில ஹாக்கி அணியும் , கேரளா மாநில ஹாக்கி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 8 – 0 என்ற கோல் கணக்கில் கேரளா மாநில ஹாக்கி அணியை வீழ்த்தி ஹரியானா அணி வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஹரியானா  அணியின் விகாஸ் சிறந்த ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: