NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

ஊராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களும் சுயமாக செயல்படுவதை உறுதி படுத்த வேண்டும் : மாதர் சங்கம் வலியுறுத்தல்

Views: 12

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சுயமாக செயல்பட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் நிலைக்குழு கூட்டங்களுக்கு, மண்டல கூட்டங்களுக்கு வரக்கூடாது. அனைத்து மன்டல‌ங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் சுயமாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் ஊராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களும் சுயமாக செயல்பட வைக்கவேண்டும் மீறி அவர்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் கூட்டங்களில் கலந்து கொண்டால் கலந்துகொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட துணைச் செயலாளர் கமலம், கமிட்டி உறுப்பினர்கள் மாரியம்மாள், சரஸ்வதி ,பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: