NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜினாமா..!

Views: 14

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் செல்வக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் 12 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. கோவில்பட்டியை சேர்ந்த சத்யா என்பவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 12 அதிமுக உறுப்பினர்கள் இருந்தனர். 5 திமுக உறுப்பினர் இருந்தனர். தற்போது 9 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு சென்று விட்டனர். இதனால் திமுகவின் பலம் அதிகரித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்திற்கு மொத்தமுள்ள 17 உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த சத்யா மற்றும் உறுப்பினர்கள் பேச்சியம்மாள், பிரியா ஆகிய மூவரைத் தவிர்த்து 14 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முழுமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் அறிவித்தார்.

மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் செல்வக்குமார்

அதிமுகவைச் சேர்ந்தவரும், துணைத் தலைவருமான செல்வக்குமார் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் துணைத் தலைவராக இருந்த வக்கீல் செல்வக்குமார் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: