NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#tutydmk: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தல் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

Views: 27

தூத்துக்குடி வடக்கு மாவட்டதில் பேரூா் மற்றும் நகர கழக நிர்வாகிகளுக்கான தோ்தல் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை : தி.மு.கழகத்தின் 15-வது அமைப்புத் தோ்தலின் தொடர்ச்சியாக பேரூா் மற்றும் நகர கழக நிர்வாகிகளுக்கான தோ்தல் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புதூா், விளாத்திகுளம், எட்டையாபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூா் ஆகிய 6-பேரூா் கழகங்களுக்கும், கோவில்பட்டி நகர கழகத்திற்கும் தோ்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள கழக நிர்வாகிகள் அதற்குரிய விண்ணப்ப படிவங்களை மாவட்ட கழக அலுவலகத்திலோ அல்லது தோ்தல் ஆணையரிடமோ நேரில் பெற்று பூர்த்தி செய்து அதற்குரிய விண்ணப்பக் கட்டணத்துடன் 05.04.2022 வியாழக்கிழமைக்குள் ஒப்படைக்க வேண்டும். போட்டி இருந்தால் கீழ்க்கண்ட தேதிகளில் அறிவிக்கப்பட்ட இடங்களில் தலைமைக் கழகத்தால் 06.05.2022 (வெள்ளிக்கிழமை) தோ்தல் ஆணையாளா்கள் தலைமையில் தோ்தல் நடைபெறும். தேர்தல் குறித்த விபரம் கீழ்வருமாறு

காலை 10.00 மணி விளாத்திகுளம் G.V.M. மஹால், விளாத்திகுளம்

காலை 11.00 மணி புதூா் காமாட்சி அம்மன் மண்டபம், புதூா்

காலை 12.00 மணி எட்டையாபுரம் சமுதாயநலக்கூடம், எட்டையாபுரம்

மதியம் 1.00 மணி கோவில்பட்டி நகரம் சத்தியபாமா திருமண மண்டபம், கோவில்பட்டி

மாலை 3.00 மணி கழுகுமலை பேரூா் கழக அலுவலகம், கழுகுமலை

மாலை 4.00 மணி கயத்தார் ஒன்றிய கழக அலுவலகம், கயத்தார்

மாலை 5.00 மணி கடம்பூா் தங்கதுரைச்சி – சாமிக்காளை நாடார் திருமண மண்டபம், கடம்பூா்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: