NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடி – திருச்செந்தூர் பைபாஸ் ஒருவழி பாதையில் விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்..!

Views: 14

தூத்துக்குடி – திருச்செந்தூர் பைபாஸ் ஒருவழி பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஆபாயம் ஏற்படுகி்றது.

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையும், மதுரை – புதிய துறைமுகம் பைபாஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா உள்ளது. உப்பாற்று ஓடை பாலம் அருகிலுள்ள இந்த சந்திப்பில், ஏராளமான விபத்துகள் நடந்த நிலையில், விபத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, இந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் செல்வோர், ரவுண்டானா சந்திப்பில் நேரடியாக, செல்ல முடியாத படியும், இடது பக்கமாக திரும்பி சுமார் அரை கிமீ தூரம் சுற்றி செல்லும் வகையிலும், அதேபோல் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நகருக்குள் செல்பவர்கள் இடது பக்கம் திரும்பி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் வகையிலும், மாற்றுவழி அமைக்கப்பட்டு உள்ளது. இது ஒருவழி சாலையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அதற்கு மாறாக மதுரை பைபாஸ் சாலையில் இருந்து வரும் லாரிகள் ஹார்பர் சாலையில் உள்ள திருப்பத்தில் சென்று திரும்புவதற்கு பதிலாக முடுக்குகாடு பகுதியில் உள்ள திருப்பத்தில் விதிமீறி குறுக்காக திரும்புவதும், அதேபோல் ஹார்பர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் முடுக்குகாடு பகுதியில் வந்து திரும்புவதற்கு பதிலாக முந்தைய திருப்பத்தில் விதிமுறைகளை மீறி குறுக்காக திரும்புவதும், தினந்தோறும் வாடிக்கையாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக வாகனங்கள் விதி மீறி எதிர் பாதைகளில் திரும்புவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.. இதனால் சில சமயங்களில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பைபாஸில் மேற்கில் இருந்து வரும் வாகனங்கள், குறுக்கே சென்று திரும்ப முடியாதபடி, முடுக்குகாடு அருகே தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கில் இருந்து வரும் பல லாரிகள் தடுப்பு கம்பிகளை கண்டுகொள்ளாமல், அரை கிமீ தூரத்தை சுற்றி செல்லாமல், விதிகளை மீறி குறுக்கே வருவதையும், கிழக்கு பகுதியில் இருந்து விதிமுறைப்படி சுற்றி வந்த ஆம்புலன்ஸ், பஸ், கார், ஆட்டோ முதலான வாகனங்கள், திரும்ப முடியாமல் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, மேம்பால பணிகள் முடியும் வரை, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: