NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#TNPSC: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடம் – ரூ.56,100/- வரை சம்பளம்: ஏப்ரல் 30 கடைசி நாள்..!

Views: 32

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (District Child Protection Officer) பதவிக்கு என மொத்தமாக 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்தி 2022

நிறுவனம்Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர்District Child Protection Officer
பணியிடங்கள்16
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறைOnline


TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் District Child Protection Officer பதவிக்கு என்று மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Sociology / Social Work / Psychology / Child Development / Criminology பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Computer operations தொடர்பாக Diploma முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

TNPSC வயது விவரம்:

01.07.2022 ம் தேதியின் படி இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 32 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விபரம் அறிந்து கொள்ள அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்:

விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNPSC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்ப கட்டணம் ரூ.150/- வசூலிக்கப்படும்.
மேலும் இதில் SC / ST / PWD / Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.

TNPSC தேர்வு கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து தேர்வு கட்டணம் ரூ.200/- வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் SC / ST / PWD / Widow விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி ஆண்லைன் மூலம் பதிவு செய்யவும்.

TNPSC Notification PDF

DCPO Application Link

TNPSC One Time Registration Link

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: