NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

சாத்தான்குளம் பகுதியில் இரும்பு வே திருடிய இருவர் கைது : ரூ.20,000 மதிப்புள்ள தடுப்பு வேலிகள் மற்றும் லோடு ஆட்டோ பறிமுதல்..!

Views: 24

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை பாதுகாப்பு இரும்பு தடுப்பு வேலிகளை திருடிய 2 பேர் கைது – ரூபாய் 20,000/- மதிப்புள்ள 700 மீட்டர் சாலை பாதுகாப்பு இரும்பு தடுப்பு வேலிகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்குளம் to கொம்பன்குளம் சாலையில் இருந்த சாலை பாதுகாப்பு இரும்பு தடுப்பு வேலிகள் காணாமல் போனதாக சாத்தான்குளம் பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் விக்ரம் சிங் என்பவர் அளித்த புகாரின் பெயரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்படி போலீசாரின் விசாரணையில் மேற்படி சாலை பாதுகாப்பு இரும்பு கம்பிகளை திருடியது சாத்தான்குளம் ஞானியார்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரது மகன்களான முருகன் (33) மற்றும் சுப்பிரமணியன் (34) ஆகிய இருவர் என்பதும் தெரியவந்தது.

உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர் மேற்படி எதிரிகள் முருகன் மற்றும் சுப்பிரமணியனை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 20,000/- மதிப்புள்ள 700 மீட்டர் சாலை பாதுகாப்பு தடுப்பு இரும்பு வேலிகளையும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 92 F 8943 (Bajaj ape auto)  என்ற  லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: