NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#Crime: தூத்துக்குடியில் மதுபழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

Views: 31

பெரியதாழையில் மதுபழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை முத்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் பாலகிருஷ்ணன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவர் மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது..

இதனால் அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு கொண்டாராம். உடன் உறவினர்கள் அவரை மீட்டு திசையன் விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்ர அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பௌலோஸ் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: